டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை - 2 மாவட்டங்களில் இன்று தொடக்கம்

டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை செய்யும் நடைமுறை 2 மாவட்டங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2024-11-15 11:47 GMT

காஞ்சிபுரம்,

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை விட பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகமாக வாங்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபானங்களுக்கு ரசீது வழங்கவும், ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்யவும் அரசு முடிவு செய்தது. இதற்காக மதுபாட்டில்களில் கியூ-ஆர் கோடு பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்களில் உள்ள சுமார் 220 டாஸ்மாக் கடைகளில், இன்று முதல் டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை செய்யும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி மதுபானங்களுக்கு ரசீது வழங்கும் நடைமுறை மற்றும் கியூ-ஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் நடைமுறை ஆகியவை செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

தமிழகம் முழுவதும் சுமார் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக ராமநாதபுரம் மற்றும் ராணிப்பேட்டையில் டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை செய்யும் திட்டம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இன்று செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஸ்கேன் செய்து பில் போடுவதற்கு கூடுதல் நேரம் பிடிப்பதால், ஏராளமான மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்