ஆவடி விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படை பயிற்சி பிரிவின் தலைமை தளபதி ஆய்வு
இந்திய விமானப்படையின் பயிற்சி பிரிவின் தலைமை தளபதி ஏர் மார்ஷல் ராதீஷ் நேற்று ஆவடி விமானப்படை நிலையத்தை பார்வையிட்டார்.;
முன்னதாக அவரை ஆவடி நிலைய கமாண்டர் டி.பி. ஷாஜி, குரூப் கேப்டன் டி.பி.ஷாஜி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் விமானப்படை நிலையத்தின் பல்வேறு தரை பயிற்சி உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏர் மார்ஷல் ராதீஷ் ஆய்வு செய்தார். நிலையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பயிற்சி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விளக்கினார். நிலைய ஊழியர்களுடன் கலந்துரையாடிய அவர், பயிற்சி அளிப்பதில் உயர்ந்த தரத்தை வெளிப்படுத்தியதற்காக அவர்களை பாராட்டினார். இந்திய விமானப்படையின் சிறந்த பாரம்பரியங்களை நிலைநிறுத்தவும், நிலையம், விமானப்படை மற்றும் தேசத்தை பெருமைப்படுத்த முழு மனதுடன் பணியாற்றவும் அனைத்து பணியாளர்களையும் அவர் வலியுறுத்தினார்.
பின்னர் அங்கு அவர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.