மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு

சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு

Update: 2023-03-12 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள விளந்திடசமுத்திரம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது32). தொழிலாளி. இவர் நேற்று காலை விளந்திடசமுத்திரம் மெயின்ரோடு பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதே பகுதி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது அனீஸ் (17) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், மணிகண்டன் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மணிகண்டன் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். காயம் அடைந்த முகமது அனீசை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்