மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பிளஸ்-1 மாணவர் பலி

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-18 18:45 GMT

தக்கலை:

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

பள்ளி மாணவர்

தக்கலை அருகே உள்ள குழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகன் ஜோஸ். இவருடைய மகன் ஜெர்வின்ஜோய் (வயது17). இவர் கருங்கலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் இருந்து பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை பள்ளியாடியில் வைத்துவிட்டு அங்கிருந்து அரசு பஸ் மூலம் பள்ளிக்கு சென்றார்.

மாலையில் வகுப்பு முடிந்த பின்பு தன்னுடன் படிக்கும் கிட்டோ (17) என்பவருடன் பஸ் மூலம் பள்ளியாடி பகுதிக்கு வந்தார். பின்பு அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ஜெர்வின்ஜோய் ஓட்டி செல்ல கிட்டோ பின்னால் அமர்ந்திருந்தார்.

இவர்கள் கிளாவறவிளை பகுதியில் ெசன்ற போது எதிரே நட்டாலம் பகுதியை சேர்ந்த கொத்தனார் செல்லத்துரை (53) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

பரிதாப சாவு

எதிர்பாராத விதமாக ஜெர்வின் ஜோய் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் செல்லத்துரை வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெர்வின் ஜோய் உள்பட 3 பேரும் சாலையில் விழுந்தனர். செல்லத்துரைக்கும், கிட்டோவிற்கும் சிறு காயம் ஏற்பட்டது. ஜெர்வின் ஜோய்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு ஜெர்வின் ஜோய் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து தொடர்பாக செல்லத்துரை தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தபுகாரின் பேரில் இறந்த பள்ளி மாணவன் ஜெர்வின் ஜோய் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்