மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் படுகாயம்

ஆவூர் அருேக மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-10-15 18:26 GMT

ஆவூர்:

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

விராலிமலை தாலுகா, ஆவூரை சேர்ந்த சகாயராஜ் என்பவரது மகன் கிளிண்டன் (வயது 18). இவர் திருச்சி மணிகண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அதேபோல ஆவூர் அருகே உள்ள மதயானைப்பட்டியை சேர்ந்த மணி மகள் சிவரஞ்சனி (19) என்பவரும் அதே கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு பின்னர் மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

கிளிண்டன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்ல சிவரஞ்சனி பின்னால் அமர்ந்து சென்றார். துறைக்குடி-மதயானைப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே திருச்சி சோழன் நகரை சேர்ந்த முருகபெருமாள் மகன் துளசிராமன் (17) என்பவர், அவரது நண்பர் நாகமங்கலம் செவல்பட்டியை சேர்ந்த சவரிமுத்து மகன் பவுல்ரூசோ (18) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கிளிண்டன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

4 பேர் படுகாயம்

இதில் 2 மோட்டார் சைக்கிள்களிலும் சென்ற 4 பேரும் படுகாயமடைந்தனர். இதைபார்த்த அந்த வழியே சென்றவர்கள் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்