மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.;

Update:2023-07-27 12:30 IST

சென்னை, 

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சென்னை மெரினா கடற்கரை சாலைக்கு அருகில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மத்திய சென்னை மாவட்ட செயலாளர் மிருதுளா, மாநிலக்குழு உறுப்பினர் தமிழ் உள்பட மாணவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்வுகளை படங்களாக பதாகைகள் ஏந்தியபடியும் கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட மணிப்பூர் பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், அவர்களை துன்புறுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினார்கள். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு திரும்பினர்.

மேலும், சென்னை கோடம்பாக்கத்தில் கல்லூரி விடுதி மாணவர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வாசி யோசி அமைப்பின் நிறுவனர் துரை.தேவேந்திரன், 3-ம் ஆண்டு கல்லூரி மாணவர்கள் ரஞ்சித், நவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்