கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி

கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

Update: 2023-07-14 20:48 GMT


விருதுநகர் செந்தில் குமாரநாடார் கல்லூரி தேசிய மாணவர் படை நாட்டு நலப்பணித்திட்ட மற்றும் பழைய மாணவர்கள் சங்கம் இணைந்து கல்வி வளர்ச்சி தினத்தை முன்னிட்டு எல்லோருக்கும் கல்வி என்ற தலைப்பில் சைக்கிள் பேரணி நடத்தினர். தேசிய மாணவர் படை அதிகாரி டாக்டர் அழகுமணி குமார் வரவேற்றார். கல்லூரி செயலர் சர்ப்பராஜன் பேரணியை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் சாரதி, சுயநிதி பாட பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காளிதாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சைக்கிள் பேரணி கல்லூரியில் தொடங்கி பாண்டியன் நகர், வில்லிபத்திரி, அழகிய நல்லூர், வரலொட்டி, வழுக்கலொட்டி, பாலவநத்தம், பெரியவள்ளிக்குளம் ஆகிய கிராமங்கள் வழியாக காமராஜர் மணிமண்டபம் வந்தடைந்தது. இதையடுத்து காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்பு பேரணி கல்லூரியை வந்தடைந்தது. செல்லும் வழியில் உள்ள பள்ளி வளாகங்கள் முன்பு மரக்கன்றுகள் நடப்பட்டன. பேரணிக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணிதிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்