கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய் பேக்கரி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த கத்தாரி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் சரத்குமார் (வயது 25), அணைக்கட்டு அருகே தார்வழிப் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் ஊழியராக வேலை செய்து வருகின்றார். இவர் அதே தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. மாணவி காதலை ஏற்றுக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த சரத்குமார் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி பெற்றோரிடம் இது குறித்து கூறியதன் பேரில் அவரது பெற்றோர் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப் பதிவு செய்து சரத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.