கல்லூரி மாணவி மாயம்

ராமநத்தம் அருகே மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2023-10-26 00:15 IST

ராமநத்தம், 

ராமநத்தம் அருகே ஆவட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு மகள் கீர்த்தனா (வயது 19). இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் ஆயுத பூஜை விடுமுறைக்கு கீர்த்தனா வீட்டுக்கு வந்தார். நேற்று மதியம் வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். இருப்பினும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கீர்த்தனாவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்