வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி

செய்யாறு அருகே வாகனம் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-10-18 15:44 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வெங்கட்ராயன் பேட்டை அல்லித் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகன் ஷாகீர் (வயது 21). இவர், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் வெம்பாக்கம் தாலுகா செல்லபெரும்புலிமேடு கிராமத்தில் உள்ள தனது பாட்டியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஷாகீர் செய்யாறு-காஞ்சீபுரம் சாலையில் தும்பை கிராமம் பஸ் நிறுத்தம் வளைவுப் பகுதியில் சென்ற போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஷாகீர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஷாகீர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்