மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2023-09-22 12:32 GMT

வாணியம்பாடியை அடுத்த மதனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கோகுல் (வயது 23). இவர் வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அதேப் பகுதியை சேர்ந்தவர் நவீன் (23). வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அவர்கள் இருவரும் ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கோகுல் ஓட்டினார். சோலூர் பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது.

இதில் மாணவர் கோகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நவீன் படுகாயம் அடைந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கோகுல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நவீன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்