விபத்தில் கல்லூரி மாணவர் பலி

திருக்கோவிலூர் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-04-01 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே மேலந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் தினேஷ் (வயது 18). திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ.முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள அய்யனார் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்