டி.என்.பாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

டி.என்.பாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-09-15 21:27 GMT

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சுற்றுலா வந்தனர்

அவல்பூந்துறை காரூத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர். அவருடைய மகன் கார்த்திக் (வயது 20). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கார்த்திக் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் டி.என்.பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் சுற்றுலா வந்தார்.அப்போது அவர்களுக்கு அங்குள்ள பவானி ஆற்றில் குளிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. உடனே ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது கார்த்திக் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார்.

ஆற்றில் மூழ்கி சாவு

இதனை பார்த்த அவருடைய நண்பர்கள் மற்றும் அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு மோட்டார்சைக்கிளில் அமர வைத்து சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு கார்த்திக் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.என்.பாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்