பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2023-10-08 21:22 GMT

பவானிசாகர்

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

கல்லூரி மாணவர்

கோவை கணபதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் ஜோசப் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ஜோசப், அவருடைய நண்பரான சரவணன் உள்பட 6 பேர் நேற்று பவானிசாகர் பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் மாலை 5.30 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியான சித்தன் குட்டை கருப்பராயன் கோவில் அருகே குளித்தனர். அப்போது ஜோசப், சரவணன் ஆகியோர் நீாில் மூழ்கினர்.

விசாரணை

உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று நீரில் மூழ்கிய 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஜோசப் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் சரவணன், கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்