எலி மருந்து சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை

குளித்தலை அருகே எலி மருந்து சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-08 18:50 GMT

குளித்தலை அருகே உள்ள பாப்பக்காபட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் தமிழ்மணி (வயது 20). இவர் குளித்தலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு வார காலமாக தலைவலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் குளித்தலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பி உள்ளார். இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி தமிழ்மணி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையறிந்த தமிழ்மணியின் பெற்றோர் அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரின் உடலில் விஷம் கலந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரித்தபோது தமிழ்மணி எலி மருந்து சாப்பிட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழ்மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்மணி எதற்காக எலி மருந்து சாப்பிட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்