திருமங்கலம் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

திருமங்கலம் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார் .

Update: 2023-07-16 20:38 GMT

திருமங்கலம், 

திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சின்ன உலகாணி கிராமத்தை சேர்ந்தவர் வேலு, பாண்டியம்மாள் தம்பதி. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் அன்புச்செல்வி(வயது 20). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த அன்புச்செல்வி திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மோட்டார்சைக்கிள் மூலம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்புச்செல்வி இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் அங்கு சென்று மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்