கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பூம்புகார் கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-17 18:45 GMT

திருவெண்காடு:

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை சட்டையில் பேட்ஜ் அணிந்து கோஷங்கள் எழுப்பினர். கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு முடிவின் படி தமிழ் நாடு உயர்கல்வி மாமன்றத்தின் பொது பாடத்திட்டத்தினை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மத்திய அரசு புதிய பாடத்திட்டத்தை தினிப்பதை எதிர்த்தும், பல்கலைக்கழக தன்னாட்சி உரிமையை பறிக்கின்ற இந்த பொது பாடத்திட்டத்தை கைவிடக்கோரியும், கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவினர் பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்களை அறிவித்துள்ளனர். இதில் முதல் கட்டமாக பூம்புகார் கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்