கல்லூரி மாணவிகள் பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம்

கல்லூரி மாணவிகள் பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்தனா்.

Update: 2022-08-27 21:49 GMT

கடத்தூர்

கோபி பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கல்லூரிக்கு மாணவிகளின் வசதிக்காக 24-ம் எண் அரசு டவுன் பஸ் இயங்கி வருகிறது. அந்த பஸ்ஸில் ஒரே நேரத்தில் ஏராளமான மாணவிகள் பயணம் செய்கிறார்கள். நேற்று காலை 8.30 மணி அளவில் 24-ம் எண் டவுன் பஸ்ஸில் மாணவிகள் படிக்கட்டில் நின்று கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்தார்கள். இதைப்பார்த்த பொதுமக்கள் போக்குவரத்து போலீசாரும், அதிகாரிகளும் மாணவிகள் இப்படி படிக்கட்டில் பயணம் செய்ய அனுமதிக்கலாமா? என்று வேதனை பட்டார்கள். மேலும் உடனே கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்