குத்தாலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

குத்தாலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.

Update: 2022-08-08 16:57 GMT

குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் விஜயேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல், பி.காம்., பி.ஏ. தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற புதன்கிழமை தொடங்குகிறது. அன்று காலை 10 மணி அளவில் சிறப்பு பிரிவினரான மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை மற்றும் பழங்குடியினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. மதியம் 12 மணி அளவில் தரவரிசையில் 400 முதல் 200 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான பி.எஸ்சி, கணிதம், மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவு மாணவர்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடைபெறும். இதேபோல், 11-ந் தேதி (வியாழக்கிழமை), 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களும் கலந்தாய்வு நடக்கிறது. 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5 உள்ளிட்டவற்றை கலந்தாய்வுக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்