புதிரை வண்ணார் நல வாரியத்தில் உறுப்பினராக சேர கலெக்டர் அழைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிரை வண்ணார் நல வாரியத்தில் உறுப்பினராக சேர கலெக்டர் அழைப்பு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில அளவில் பொருளாதார, சமூக மற்றும் கல்வியில் மிகவும் அடித்தளத்தில் வாழ்ந்து வரும் புதிரை வண்ணார் இனத்தைச் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நல வாரிய அட்டை வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் புதிரை வண்ணார் இனத்தை சேர்ந்தவர்கள் சாதிச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல், வண்ண புகைப்படத்துடன் மனு தயார் செய்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பித்து புதிரை வண்ணார் நல வாரிய அட்டை பெற்று பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.