இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- கலெக்டர்

இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2022-07-14 13:16 GMT

தனியார் இ-சேவை மையத்தினை மாவட்ட கலெக்டர் கயாத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார். 

இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

இ-சேவை மையங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதற்கு நீண்ட தூரம் சென்று அரசு அலுவலகங்களில் காத்திருக்கக்கூடிய சூழ்நிலை நிலவியது. இதையடுத்து தனியார் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை எளிதாக பெற்று கொள்வதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை தனியார் இ-சேவை மையங்களில் செலுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.

கூடுதல் கட்டணம்

இந்த நிலையில் இ-சேவை மையங்களில் சான்றிதழ் பெறுவதற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து திருவாரூர் விளமல் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் இ-சேவை மையத்தில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், 'அனைத்து இ-சேவை மையங்களிலும் வசூலிக்கப்படும் கட்டணம் தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். ஆய்வின்போது தாசில்தார் நக்கீரன் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்