தியேட்டர்களில் கலெக்டர் திடீர் ஆய்வு

தேனி அருகே உள்ள தியேட்டர்களில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-13 18:45 GMT

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தியேட்டர்களில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேற்று திடீர் ஆய்வு செய்தார். தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி தியேட்டருக்கான உரிமை புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தார். மேலும், மின்சார பராமரிப்பு முறைகள், தீயணைப்பு பாதுகாப்பு வசதிகள், தீயணைப்பு கருவிகளின் நிலை, அவசர வழிகள், முதல் உதவி சாதனங்கள் போன்ற அவசர கால பயன்பாட்டு உபகரணங்களின் நிலை மற்றும் குடிநீர், கழிப்பறை வசதிகள் குறித்தும், உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக வழங்கப்பட்டு வரும் தமிழக அரசின் சாதனை விளக்க விளம்பர குறும்படங்கள் முறையாக திரையிடப்படுகிறதா? என்று ஆய்வு செய்து, அதற்கான பதிவேடுகளையும் பார்வையிட்டார். ஆய்வின்போது, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்