தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தளங்களில் 'மதி அங்காடி' அமைக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தளங்களில் ‘மதி அங்காடி’ அமைக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-09-01 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தளங்களில் 'மதி அங்காடி' அமைக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் வருகிற 11-ந் தேதிக்குள்ள விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மதி அங்காடி

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் முக்கிய சுற்றுலா தளங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய "மதிஅங்காடி" அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய "மதிஅங்காடி" மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன் சுற்றுலா பயணிகளுக்கும் அங்குள்ள பொருட்கள் தரமாக குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.

விண்ணப்பிக்கலாம்

எனவே, மதிஅங்காடி செயல்படுத்திட ஆர்வமும், தகுதியும் உடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சிஅளவிலான குழு கூட்டமைப்புகள் மற்றும் மாற்றுத்திறனாளி நலிவுற்றோர் குழுக்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் உறுப்பினர்கள் மகளிர் சுய உதவிக்குழுவில் சேர்ந்து ஓராண்டு பூர்த்தி செய்து இருக்க வேண்டும். மேலும் தேசிய ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இணையதளத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் உரிய விதிமுறைகளின்படி விண்ணப்பங்களை திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை தபால்கள் மூலமாகவோ அல்லது நேரிலோ வருகிற 11-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்