ரேஷன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

ரேஷன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-04-01 18:45 GMT

ஊட்டி,

குன்னூரில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் திடீரென ஆய்வு மேற்கொண்டார். எடை எந்திர சான்று போன்றவற்றை விற்பனையாளர்கள் பராமரிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் விற்பனை முனைய எந்திரத்தில் நடப்பு மாதம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்த எண்ணிக்கை, மீதமுள்ள அரிசி, பச்சரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் இருப்பு மற்றும் பொருட்களின் தரம், எடை, கடைகளின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தினார். தொடர்ந்து கலெக்டர் குன்னூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று பேக்கரியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது குன்னூர் தாசில்தார் சிவக்குமார் உடனிருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்