அழகிரிசாமி சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
அழகிரிசாமி சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை;
பட்டுக்கோட்டை நகர் தஞ்சை சாலையில் மொழிப்போர் தியாகி அழகிரி மணிமண்டபம் உள்ளது. தமிழக அரசு சார்பில் அவரது 124-வது பிறந்த நாளையொட்டி தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அழகிரிசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சி யில் பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பிரபாகர், நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா, முன்னாள் எம்.எல்.ஏ. ஏனாதி பாலு, நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார், நகர தி.மு.க. அவைத்தலைவர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் குமார், தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் நகர தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.