விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் 1,000 பேருக்கு "இ" சான்றிதழ் கலெக்டர் மோகன் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் 1,000 பேருக்கு “இ” சான்றிதழ் வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-23 18:07 GMT


இ சான்றிதழ்

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர், முதன்மை அரசு செயலாளரால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் (அல்லது) ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதை கண்டறிந்து நீக்குவதற்கும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களது ஆதார் எண்ணை தாமாகவே முன்வந்து தங்களது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் இணைத்திடும் முதல் 1,000 வாக்காளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தின் "இ" சான்றிதழ் வழங்கப்படும் என மாநில தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைக்கும் முறைகள்

இந்த "இ"- சான்றிதழை பெறுவதற்கு http://www.nvsp.in/ வாக்காளர் உதவி செயலி (Voter Helpline App), https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen-amp;hl=en, http://voterportal.eci.gov.in/ ஆகிய ஏதேனும் ஒரு செயலியை வாக்காளர்கள் பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்திட வேண்டும். ஆதார் எண்ணை இணைத்த பின்பு அதற்கு வழங்கப்படும் குறியீட்டு எண்ணை தனியாக குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் http://elections.tn.gov.in/getacertificate என்ற இணையதளத்தின் முகவரிக்கு சென்று உங்களது செல்போன் எண்ணையும், ஓ.டி.பி எண்ணையும் முன்னரே குறித்து வைத்துள்ள குறியீட்டு எண்ணையும் உள்ளீடு செய்தால் சான்றிதழ் கிடைக்கும்.

பயன்பெறலாம்

வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையானதாக உருவாக்கிடும் பொருட்டு ஆதார் எண்ணை இணைத்தல் என்ற முறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தாமாகவே முன்வந்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் இணைத்திடும் முதல் 1,000 வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் "இ"-சான்றிதழானது வழங்கப்படும் என்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி இணைத்து "இ"-சான்றிதழை தரவிறக்கம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்