வளர்ச்சி திட்ட பணிகளை குறித்த காலத்தில் முடிக்க முழு கவனம் செலுத்த வேண்டும்- கலெக்டர்

குடவாசல் ஒன்றிய பகுதிளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை குறித்த காலத்தில் முடிக்க முழு கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் சாருஸ்ரீ அறிவுறுத்தினார்.

Update: 2023-04-18 19:00 GMT

குடவாசல் ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை குறித்த காலத்தில் முடிக்க முழு கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் சாருஸ்ரீ அறிவுறுத்தினார்.

சீரமைப்பு பணிகள்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தை சேர்ந்த 51.புதுக்குடியில் சமத்துவபுரத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அன்னவாசல், நாரணமங்கலம், சீதக்கமங்கலம், கண்டிரமாணிக்கம் ஆகிய ஊராட்சிகளில் புதிதாக பள்ளி கட்டிடங ்கள் கட்டப்பட்டு வருகின்றன. பிரதாபராமபுரம் ஊராட்சியில் பயணிகள் நிழலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.

இதேபோல் கடலங்குடி, சற்குணேஸ்வரபுரம், வயலூர் ஆகிய ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அவர் சமத்துவபுரத்தில் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

முழு கவனம்

அப்போது அவர் அதிகாரிகளிடம் கூறியதாவது:- வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. எனவே பள்ளி கட்டிட பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும். திட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் முடிவடைய அதிகாரிகள் முழு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் மோகன்ராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தனசேகரன், மண்டல துணை தாசில்தார் சிவராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், சாமிநாதன், ஊராட்சி தலைவர்கள் புதுக்குடி கண்ணன், அன்னவாசல் சங்கர், சேங்காலிபுரம் கண்ணன், நாரணமங்கலம் வளர்மதிசண்முகம், சீதக்கமங்கலம் ராமலிங்கம், பிரதாபராமபுரம் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்