பூமாலை வணிக வளாகம் புனரமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை பூமாலை வணிக வளாகம் புனரமைக்கும் பணிணை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

Update: 2023-03-30 16:58 GMT

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் பூமாலை வணிக வளாகம் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

இந்த வளாகத்தில் அனைத்து நவீன வசதிகளை கொண்ட மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களான சிறுதானிய பொருட்கள், சணல் பைகள், உணவு பொருட்கள், ஜவ்வாதுமலை பொருட்களான தேன், சாமை, புளி போன்ற பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பூமாலை வணிக வளாகம் புனரமைக்கும் பணியை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.

ஆய்வின் போது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குனர் சையத்சுலைமான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் ராமகிருஷ்ணன், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் (வாழ்வாதாரம்) ஜான்சன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்