புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ஆய்வு
புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளுக்காக ரூ.19 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த அங்கன்வாடி மையம் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலும் சுகாதாரமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும். மேலும், இயற்கையாக குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்றாற்போல் கலை ஓவியங்களுடன் இருக்க வேண்டும். விரைவில் அங்கன்வாடி மையத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.