வனப்பகுதிக்குள் நடந்து சென்று நீர்வரத்து கால்வாயை கலெக்டர் ஆய்வு

பேரணாம்பட்டு அருேக வனப்பகுதிக்குள் நடந்து சென்று நீர்வரத்து கால்வாயை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

Update: 2022-07-02 18:12 GMT

பேரணாம்பட்டு அருேக வனப்பகுதிக்குள் நடந்து சென்று நீர்வரத்து கால்வாயை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

தூர்ந்துபோன கால்வாய்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கவுராப்பேட்டை கிராமத்தில் வனப்பகுதிக்குள் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணைக்கு அருகில் உள்ள சத்கர்-அல்லேரி மலையில் இருந்து மழைநீர் வந்து கொண்டிருந்தது. தடுப்பணையில் இருந்து கால்வாய் மூலம் காப்ராபாத் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அந்த கால்வாய் தற்போது தூர்ந்து போய் விட்டது.

இந்த நீர்வரத்து கால்வாய் மூலம் பேரணாம்பட்டு ஒன்றியத்தை சேர்ந்த டி.டி.மோட்டூர், மொரசப்பல்லி மற்றும் குடியாத்தம் ஒன்றியத்தை சேர்ந்த எர்த்தாங்கல், நெல்லூர்பேட்டை ஆகிய 4 ஊராட்சிகளில் 20-க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன் அடைந்து வந்தனர். சுமார் 1,000 ஏக்கர் நிலம் பாசன வசதி ெபற்றது.

விவசாயிகள் கோரிக்கை

இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை இடிந்து சேதமாகியது. வனத்துறை தடுப்பணையை ரூ.2 லட்சத்தில் சீரமைத்தது. போதிய நிதி இல்லாததால் பணி முடிவு பெறாமல் பாதியில் நின்று போனது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுப்புற விவசாயிகள் தங்கள் பங்களிப்பு நிதி ரூ.7 லட்சத்தில் கால்வாயை தூர் வாரினர். எனினும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் தூர்ந்து போனதால் அதிகமான மழை பெய்தும் ஏரிக்கு மழைநீர் வரவில்லை. மழைநீர் வீணாகி போனதால் அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் நீர்வரத்து கால்வாயை தூர்வார வேண்டும் என வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அமலு விஜயன் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்

நடந்து சென்ற கலெக்டர்

கோரிக்கையை பரிசீலனை செய்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று மாலை திடீரென கவுராப்பேட்டை கிராமத்துக்கு வந்து, வனப்பகுதிக்குள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தடுப்பணை மற்றும் தூர்ந்துபோன நீர்வரத்து கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பேரணாம்பட்டு அருகே ஏரிக்குத்தி கிராமத்தில் இருந்து பொகளூர்-ஆலாங்குப்பம் கிராமத்துக்கு வனப்பகுதிக்குள் செல்லும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் செல்லும் சாலையை ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் ேபாது சப்-கலெக்டர் தனஞ்செயன், பேரணாம்பட்டு தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் வடிவேல், ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, பாரி, கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் ஆத்மா திட்ட தலைவருமான பொகளூர் ஜனார்த்தனன், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் டேவிட், தமிழக விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் உதயகுமார் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்