லால்குடி ஒன்றியத்தில்வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

லால்குடி ஒன்றியத்தில்வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு நடத்தினர்.

Update: 2023-10-20 20:17 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் லால்குடிக்கு வருகை தந்தார். அவர் லால்குடி ஊராட்சி ஒன்றியம் மகிழம்பாடி கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் சிறுமயங்குடி ஊராட்சியில் கொத்தமங்கலம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.15.83 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரேஷன்கடை கட்டுமான பணி மற்றும் சிறுமயங்குடி மற்றும் சிறுதையூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், சிறுதையூர் கிராமத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல விடுதியினையும் பார்வையிட்டு விடுதியின் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், இணை இயக்குனர் (ஊரக நலப்பணிகள்) லட்சுமி, லால்குடி தாசில்தார் விக்னேஷ், அரசு மருத்துவர் செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ராஜ்மோகன் மற்றும் ஊராட்சி தலைவர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்