வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு

வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-07-06 17:58 GMT

சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட தில்லைநத்தம் கிராமத்தில் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க பயனாளிகளை கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பாதரக்குடி கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலையை பார்வை விட்டு ஆய்வு செய்தார். மேலும் கரைமேடு ஊராட்சியில் அண்ணன் பெருமாள் கோவில் முதல் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வரை ரூ. 22 லட்சத்தி 40 ஆயிரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலையை மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் சீதாலட்சுமி, ஊராட்சி தலைவர்கள் ரமணி ராஜ், அம்பேத்கார், பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்