செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பழவேலியில் கழிவு கசடு சுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பழவேலியில், கழிவு கசடு சுத்திகரிப்பு நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-03-24 09:23 GMT

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பழவேலியில், ரூ.4.36 கோடி மதிப்பீட்டில் பழைய குப்பைகள் அப்புறப்படுத்தும் பணி, மற்றும் பழவேலியில், ரூ.3.82 கோடி மதிப்பீட்டில் கழிவு கசடு சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் செங்கல்பட்டு ஆணையாளர் (பொ) ஆர்.நாகராஜன், செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்