ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு

ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-12-19 19:26 GMT


விருதுநகர் யூனியன் கூரைக்குண்டு பஞ்சாயத்து முத்துராமலிங்கநகர், விருதுநகர் 3-வது வார்டு, புல்லலக்கோட்டை ரோடு ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு மேற்கொண்டார். விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் 691 முழு நேர ரேஷன் கடைகளும், 265 பகுதி நேர ரேஷன் கடைகளும் ஆக மொத்தம் 956 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட ரேஷன் கடைகளில் மொத்தம் 5 லட்சத்து 76 ஆயிரத்து 887 ரேஷன் கார்டு தாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர் வர்த்தக காரியஸ்தகர்கள் கூட்டுறவு சங்கம், விருதுநகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை ஆகியவற்றின் ரேஷன் கடைகளில் ஒதுக்கீடு நகர்வு, இருப்பு மற்றும் வினியோகம் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து, பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் முருகவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்