வாலாஜாபாத்தில் அரசு ஆதிதிராவிட நல விடுதியில் கலெக்டர் ஆய்வு

வாலாஜாபாத்தில் அரசு ஆதிதிராவிட நல விடுதியில் பணிகளை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-14 09:00 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டவாக்கம் ஊராட்சியில் அங்கன்வாடி மைய கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

ரேஷன் கடையை நேரில் பார்வையிட்டு அங்கு வழங்கப்படும் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து பூதேரி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பார்வையிட்டு அங்கு ரூ.7 லட்சத்து 48 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு வரும் சத்துணவு மைய கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் பாடங்கள் குறித்து கேட்டறிந்து குழந்தைகளுக்கு புரியும் வகையில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பாடம் நடத்தினார். இதை தொடர்ந்து செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிட நல மாணவர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்