வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
பந்தலூா் அருகே வளர்ச்சி பணிகளை கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.
பந்தலூர்
பந்தலூா் அருகே வளர்ச்சி பணிகளை கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.
உழவர் சந்தை அமைக்கும் பணி
பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் கூடலூர் ஒன்றியமும், சேரங்கோடு ஊராட்சியும் இணைந்து ரூ.48 லட்சத்து 65 ஆயிரத்தில் உழவர் சந்தை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பகுதியில் ரூ.8 லட்சத்தில் சுகாதார வளாகமும் கட்டப்பட்டுள்ளது.
இதுதவிர நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட அம்பலமூலாவில் இருந்து கொட்டாடு வரை கூடலூர் ஒன்றியம் சார்பில் ரூ.7 கோடியில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வட்டகொல்லி என்ற இடத்தில் சிறிது தூரம் வரை வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் வருவதால் அந்த பகுதியில் சாலை அமைக்க வனத்துறை தடை விதித்துள்ளது. ஆனால் அந்த பகுதியிலும் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம புகார் அளித்தனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் பந்தலூர் பகுதியில் நடைபெறும் சாலை அமைக்கும் பணி, உழவர் சந்தை, சுகாதார வளாகம் அமைக்கும் பணி உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட அவுண்டேல் பகுதியில் சாலை அமைக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
இந்்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா, பந்தலூர் தாசில்தார் நடேஷன், கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மோகன்குமாரமங்கலம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர், ஒன்றிய பொறியாளர் ரமேஸ்குமார், பணி மேற்பார்வையாளர்கள் அப்பாதுரை, ரவி, கிராம நிர்வாக அலுவலர்கள் அபிராமி, கர்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.