வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

திருமருகல் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.

Update: 2023-05-02 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.

வளர்ச்சி பணிகள்

திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பாரத் நிர்மான் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம்-III-ன் கீழ் ரூ.2 கோடியே 90 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் ஆலங்குடிச்சேரி முதல் அகரகொந்தகை வரையிலும், பண்டாரவடை ஊராட்சியில் ரூ.3 கோடியே 75 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் சீயாத்தமங்கை, மானாம்பேட்டை, ஆற்றங்கரை சோதனைசாவடி, பண்டாரவடை முதல் போலகம் வரையிலும், வவ்வாலடி ஊராட்சியில் ரூ 4 கோடியே 19 லட்சத்து ஆயிரம் மதிப்பில் மேலப்பகுதி, வவ்வாலடி முதல் கீழஆமப்பட்டம், அரசூர் வரையிலும் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மேலும் ஏனங்குடி ஊராட்சியில் ரூ.4 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும், எரவாஞ்சேரி ஊராட்சியில் ரூ.3 கோடியே 43 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் மேலக்கரையிருப்பு முதல் கீழகரையிருப்பு, நாட்டார்மங்கலம் முதல் எரவாஞ்சேரி, மற்றும் ரூ.4 கோடியே 11 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் நெய்குப்பை பொற்காலக்குடி, பெருசாத்தாங்குடி வரை சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

தொடர்ந்து குழந்தை நேயம் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.26 லட்சம் மதிப்பில் கட்டப்படும் 2 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சேகர், திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவகர், பாலமுருகன், உதவி பொறியாளர்கள் செந்தில்குமார், சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்