வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

அடுக்கம்பாறை ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

Update: 2023-08-31 17:07 GMT

கலெக்டர் ஆய்வு

கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அடுக்கம்பாறை ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். மேட்டுஇடையம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வகுப்பறைகள், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அ.கட்டுபடி, மேட்டு அடுக்கம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தார்.

விரைந்து முடிக்க உத்தரவு

தொடர்ந்து மூஞ்சூர்பட்டு ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை பார்வையிட்டார். அப்போது பணிகளை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் தொன்போஸ்கோ, கவுன்சிலர் வேலாயுதம், ஊராட்சி செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்