கால்வாய் தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு
செங்கோட்டை அருகே கால்வாய் தூர்வாரும் பணியை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள பெரியப்பிள்ளை வலசை ஊராட்சியில் நேற்று மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். அவர் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கலங்காதகண்டி மற்றும் சுப்பிரமணியபுரம் ஆகிய கிராமங்கள் வரை உள்ள வரத்து கால்வாய் தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.