தலைஞாயிறு ஒன்றியத்தில் புதிய ரேஷன் கடைகள் கட்டும் பணி
தலைஞாயிறு ஒன்றியத்தில் புதிய ரேஷன் கடைகள் கட்டும் பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
தலைஞாயிறு ஒன்றியத்தில் புதிய ரேஷன் கடைகள் கட்டும் பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
ரேஷன் கடை கட்டும் பணி
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் கொளப்பாடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.60 லட்சம் மதிப்பீட்டில் மீன் மற்றும் காய்கறி விற்பனைக்கூடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 15-வது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டும் பணி, சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பாங்கல் ஊராட்சியில் ரூ.16.51 லட்சம் மதிப்பீட்டிலும், புத்தூர் ஊராட்சியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெறும் புதிய ரேஷன் கடை கட்டும் பணி, நத்தப்பள்ளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டும் பணி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதிய வகுப்பறைகள்
மேலும், குழந்தை நேசம் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கொளப்பாடு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் தலா ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் என ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதையும் கலெக்டர் பார்வையிட்டார்.
ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, செபஸ்டியம்மாள், ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி, ரவி, ரத்தினகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.