அந்திவாடி பகுதியில்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

அந்திவாடி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-04-19 18:45 GMT

மத்திகிரி

சுற்றுச்சுவர்

ஓசூர் அருகே அந்திவாடி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு நமக்கு நாமே திட்டத்தில் சுற்றுச்சுவர், மாணவர்களுக்கு உணவு அருந்தும் அறை ஆகியவை ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அந்திவாடி விளையாட்டு மைதானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கம், நீச்சல்குளம், நடைபாதை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது விளையாட்டு மைதானத்தில் கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

நலவாழ்வு மைய கட்டிடம்

தொடர்ந்து ஏ.எஸ்.டி சி. ஹட்கோவில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் குப்பை தரம் பிரிக்கும் கட்டிட கட்டுமான பணிகள், குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி மற்றும் பதிவேடுகள், பணியாளர் விவரங்களை, பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஜூஜூவாடி பகுதியில், ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி, ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்புற நலவாழ்வு மைய கட்டிட கட்டும் பணி ஆகியவற்றை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் ஆனந்த் நகரில் குப்பை தரம் பிரிக்கும் 2 கட்டிடங்களின் கட்டுமான பணிகளையும், குப்பைகளை தரம் பிரித்து, பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து மீண்டும் உபயோகப்படுத்தும் வகையில் மூலப்பொருட்களாக மாற்றும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர் சரண்யா, மாநகராட்சி பொறியாளர் ராசேந்திரன், கவுன்சிலர் பாக்கியலட்சுமி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்