ரூ.4 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணி
திருவாரூரில் ரூ.4 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
திருவாரூரில் ரூ.4 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
நெல் சேமிப்பு கிடங்கு
திருவாரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நெல் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் ரூ.4 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் 7,250 டன் கொள்ளளவில் கான்கிரீட் தளத்துடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. இதை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் 2750 டன் கொள்ளளவில் கான்கீரிட் தளத்துடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் தலா 1500 டன் கொள்ளளவில் கான்கிரீட் தளத்துடன் 3 கிடங்குகள் என மொத்தம் 7250 டன் கொள்ளளவு கொண்ட கொள்ளளவிலான நெல் சேமிப்பு கிடங்குகள் ரூ.4 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அறிவுறுத்தல்
ஆய்வின்போது பணிகளின் முன்னேற்றம் குறித்து பொறியாளரிடம் கேட்டறிந்த அவர், பணிகளை தரமானதாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், தரக்கட்டுபாடு மேலாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் கோட்டை ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.