ரூ.65 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்

ரூ.65 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.

Update: 2023-07-13 19:00 GMT

திருப்புவனம்

திருப்புவனம் யூனியனை சேர்ந்த அச்சங்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு தி்ட்ட முகாம் நடைபெற்றது. மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் பல்வேறு அரசு நலத்துறையின் சார்பில் மொத்தம் 124 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சத்து 76 ஆயிரத்து 797 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாந்தி, இணை இயக்குனர்கள் தனபாலன் (வேளாண்மை துறை), நாகநாதன் (கால்நடை பராமரிப்பு துறை), ஒன்றிய குழு உறுப்பினர் ஈஸ்வரன், திருப்புவனம் தாசில்தார் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கண்ணி, ராஜசேகரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்