நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின உறுதிமொழி ஏற்பு கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது

நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின உறுதிமொழி ஏற்பு கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது

Update: 2022-11-14 18:45 GMT

நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். இதில் சிறப்புக்கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும், நலனுக்காகவும் எப்போதும் உடன் நிற்போம் என்றும், அவர்களுக்கு இருக்கக்கூடிய சமூக, பொருளாதார, பண்பாட்டு சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் எனவும் உறுதி ஏற்கப்பட்டது. முழுமையாகவும், சமத்துவத்துடனும் வெற்றிகரமாகவும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இங்கு எந்த பாகுபாடும் இன்றி, அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அவர்களுக்கு அளிப்பது இன்றியமையாதது என நாங்கள் உணர்த்திருக்கிறோம் என கலெக்டர் ஸ்ரேயா சிங் உறுதிமொழியை வாசிக்க, மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.

இதனிடையே வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மாற்றுத்திறனாளி மாணவி மதுமிதா கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சர்வதேச மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்று‌ள்ளார். மேலும் குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற 14-வது சர்வதேச அளவிலான போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார். மாணவி பதக்கத்தை கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். மேலும் மாணவியை கவுரவிக்கும் வகையில் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த குழந்தைகள் தின நிகழ்ச்சியில் மாணவி மதுமிதாவை கலெக்டர் ஸ்ரேயா சிங் அழைத்து கொடி ஏற்ற வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்