தர்மபுரி மாவட்டத்தில் 37 இடங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்

தர்மபுரி மாவட்டத்தில் 37 இடங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்

Update: 2022-09-29 18:45 GMT

தர்மபுரி மாவட்டத்தில் 37 இடங்களில் நடந்த வெறிநோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

வெறிநோய் தினம்

உலக வெறிநோய் தினத்தையொட்டி கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற உள்ளது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பிக்கனஅள்ளி ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் பிக்கனஅள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் பத்மாவதி, ஜக்கசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சுவாமிநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் குணசேகரன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் ஜான்சிராணி, உதவி திட்ட அலுவலர் உஷாராணி, தாசில்தார் ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், கலைச்செல்வி உள்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்