திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.70 லட்சம் வசூல்

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் ரூ.70 லட்சம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-06 08:15 GMT

திருத்தணி முருகன் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் புத்தாண்டு, சித்திரை மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைப்பெற்றது. இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், அண்டை மாநிலங்களிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்தி சென்றனர்.

பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய உண்டியல் பணம் எண்ணுவதற்கு தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் அவர்களிடம் அனுமதி பெற்று திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் மலைக்கோவில் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையார், செயல் அலுவலர் விஜயா முன்னிலையில் கோவில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

இதில் 22 நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.70 லட்சத்து 77 ஆயிரத்து 595 வருவாயாக கிடைத்தது. மேலும் தங்கம் 466 கிராம், வெள்ளி 6 ஆயிரத்து 252 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்