அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கூட்டு பயிற்சி
அளக்குடி ஊராட்சியில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கூட்டு பயிற்சி நடந்தது
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி, சேத்திருப்பு அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கூட்டு பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ் தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் பாலு முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி கலந்து கொண்டு பேசுகையில், அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஒரு பாடவேளை உடற்கல்வியை போதிக்க வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு கூட்டு பயிற்சியும் பல்வேறு போட்டிகளும், யோகாவும் கற்றுக் கொடுக்கப்படுகிறது என்றார். இதில் ஊராட்சி உறுப்பினர்கள் சுடர்மணி, முருகானந்தம்., ஆசிரியர்கள் சந்திர கணேசன், ஷர்மிலி, சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷ் குமார் நன்றி கூறினார்.