கோவை போலீசின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

கோவை மாநகர போலீசின் டுவிட்டர் கணக்கு 5 மணி நேரம் முடக்கப்பட்டது. கிரிப்டோ கரன்சி தகவல்களை ஹேக்கர்ஸ் பகிர்ந்துள்ளனர்.

Update: 2022-10-20 18:45 GMT


கோவை மாநகர போலீசின் டுவிட்டர் கணக்கு 5 மணி நேரம் முடக்கப்பட்டது. கிரிப்டோ கரன்சி தகவல்களை ஹேக்கர்ஸ் பகிர்ந்துள்ளனர்.

மாநகர போலீசின் டுவிட்டர்

கோவை மாநகர போலீசார் முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கோவை மாநகர போலீஸ் என்ற பெயரில் தங்களுக்கு என்று ஒரு கணக்கினை உருவாக்கி பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை வெளியிட்டு வருகிறது. இதில் குறிப்பாக சைபர் கிரைம் குற்றங்கள், விபத்து தடுப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு தகவல்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வீடியோக்களும் பதிவிடப்படுகிறது.

இதுதவிர போலீஸ் துறையில் நடைபெறும் நிகழ்வுகள், மக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்பது என பல்வேறு தகவல்களையும் போலீசார் பகிர்ந்து வருகின்றனர்.

முடக்கம்

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மர்ம நபர்கள் கோவை மாநகர போலீசின் டுவிட்டர் கணக்கினை முடக்கினர். மேலும் அதில் கிரிப்டோ கரன்சி குறித்த தகவல்களையும் தேவையில்லாத உரையாடல்களும் பகிரப்பட்டு இருந்தது. நேற்று காலை இதனை பார்த்த மாநகர போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்த சைபர் கிரைம் போலீசார் உடனடியாக செயல்பட்டு டுவிட்டர் கணக்கை மீட்கும் முயற்சியில் இறங்கினர். 5 மணிநேரத்துக்கு பின்னர் காலை 8.30 மணிக்கு டுவிட்டர் கணக்கை மீட்டெடுத்தனர். கோவை மாநகர போலீசாரின் டுவிட்டர் கணக்கு ஹேக்கர்ஸ்களால் முடக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்