கோவை அணி சாம்பியன்

திண்டுக்கல்லில் நடந்த மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் கோவை அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

Update: 2023-01-09 18:45 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கே.எப்.சி. கால்பந்து குழு சார்பில், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் 11-வது ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. இதில் சென்னை, மதுரை, கோவை, சேலம், தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 44 அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டிகள் 14 வயதிற்குட்பட்ட மற்றும் பொது ஆகிய பிரிவுகளிலும், நாக்-அவுட் சுற்று அடிப்படையிலும் நடந்தது. இந்நிலையில் நேற்று அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடந்தது. இதனை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

பின்னர் நடந்த இறுதிப்போட்டியில் கோவை எலைட்-திண்டுக்கல் கே.எப்.சி. அணிகள் மோதின. இதில் திண்டுக்கல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோவை அணி சாம்பியன் பட்டம் வென்றது. 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் அனுகிரகா பள்ளி அணி முதலிடம் பிடித்தது. பின்னர் வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. இதனை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, துணைமேயர் ராஜப்பா, கால்பந்து கழக துணைத்தலைவர் ரெத்தினம், செயலாளர் சண்முகம், ஆக்கி சங்க தலைவர் நாட்டாண்மை காஜாமைதீன், மகளிர் ஆக்கி சங்க காப்பாளர் ரமேஷ்பட்டேல் ஆகியோர் வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை கே.எப்.சி. கால்பந்து குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்