உச்சிப்புளி நாற்றுப்பண்ணையில் தயார் நிலையில் தென்னங்கன்றுகள்
ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி நாற்றுப்பண்ணையில் தென்னங்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் தற்போது 11 ஆயிரம் எண்ணிக்கையில் நெட்டை- குட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு 6 மாத கன்றுகளாக விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. ஒரு தென்னங்கன்றின் விலை ரூ.125 ஆகும். இந்த நெட்டை-குட்டை ரக தென்னங்கன்றுகள் 3 முதல் 4 ஆண்டுகளில் காய்ப்புக்கு தயாராகிவிடும்.
எனவே விவசாயிகள் தென்னங்கன்றுகளை வாங்கி பயன்பெறலாம். மேலும் விவரங்களை உச்சிப்புளி தென்னை நாற்றுப்பண்ணை உதவி வேளாண்மை அலுவலரை 7904975577 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை உதவி வேளாண்மை அலுவலர் அமர்லால் தெரிவித்தார்.